சிம்புக்கு பதில் தனுஷ் வந்தது எப்படி ? பலரும் அறியாத தகவல் ஆச்சே இது..!

தனுஷ்
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாக அதே சமயத்தில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார் சிம்பு. இருவரும் சமகாலத்தில் அறிமுகமானதால் ரசிகர்களால் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டனர்.

ரசிகர்களை தாண்டி சிம்பு மற்றும் தனுஷ் இடையே போட்டி இருந்துவந்தது பலரும் அறிந்ததே. ரஜினி மற்றும் கமல், விஜய் மற்றும் அஜித் வரிசையில் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோரும் போட்டிநடிகர்களாக பார்க்கப்பட்டனர். ஆனால் மற்ற போட்டி நடிகர்களிடையே இருந்து வந்த நட்பு இவர்களிடம் இருந்ததா என்றால் அது சந்தேகமே.

வலிமை என்னை ஏமாற்றிவிட்டது…பிரபல இயக்குனர் கருத்து..!

ஆனால் காலங்கள் மாற மாற இருவருக்குள்ளும் நட்பு வளர ஆரம்பித்தது. ஒரு மேடையில் இவர்கள் இருவரும் ஒன்றாக பேசும்போது சிம்பு எங்களுக்குள் போட்டி இருந்தது உண்மைதான் ஆனாலும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றோம் என கூறினார்.

இந்நிலையில் சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்ததாக ஒரு தகவல் இணையத்தில் பரவிவருகிறது. தனுஷின் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்
புதுப்பேட்டை
.
செல்வராகவன்
இயக்கிய இப்படம் வெளியானபோது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது இப்படம் அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் செல்வராகவன் புதுப்பேட்டை படத்தை இயக்குவதற்கு பதிலாக சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க முடிவெடுத்தாராம்.சிம்புவும் நடிக்க சம்மதித்திருக்கிறார்.ஆனால் அப்போது சிம்புவிற்கு கால் சீட் பிரச்சனைகள் ஏற்பட சிம்பு படத்தை கிடப்பவை போட்டுவிட்டு தனுஷை வைத்து புதுப்பேட்டை படத்தை இயக்கினார் செல்வராகவன்..பல ஆண்டுகள் கழித்து தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் – நடிகர் விஷால் பேச்சு!

அடுத்த செய்திநயன்தாராவுக்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய விக்கி: அதிர்ச்சியில் ‘ஏகே 62’ படக்குழு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.