ஜி.வி. பிரகாஷின் 'செல்ஃபி' படம் எப்படி இருக்கு..?: முழு விமர்சனம் இதோ..!

இசையமைப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர்
ஜி.வி. பிரகாஷ் குமார்
. இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் மற்றும்
கெளதம் மேனன்
நடிப்பில் ‘
செல்ஃபி
‘ படம் வெளியாகியுள்ளது.

வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் தில்லு முல்லுகள் மற்றும் புரோக்கர்களை பற்றிய கதையாக ‘செல்ஃபி’ படம் உருவாகியுள்ளது.

கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஹீரோக்கும் இடையில் மோதல் உருவாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி படத்தின் ஒன் லைன்.

நயன்தாராவுக்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய விக்கி: அதிர்ச்சியில் ‘ஏகே 62’ படக்குழு..!

முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷின் நடிப்பு கச்சிதமாக உள்ளது. எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் அசால்ட்டான நடிப்பால் முழு படத்தையும் சுமந்திருக்கிறார் ஜி.வி. கெளதம் மேனனின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நெகட்டிவ் கேரக்டரில் தனது பாணியில் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார் கெளதம்.

ஒரு மெடிக்கல் சீட்டிற்கு தற்போது எந்த அளவுக்கு மதிப்பு உள்ளது என்பதையும், பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர்களின் ஆசையை புரோக்கர்கள் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்த்துவம் விதமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘செல்ஃபி’ நிச்சயமாய் தமிழ் சினிமாவில் தாக்கத்தைஏற்படுத்தியிருக்கும்.

BEAST VS KGF2 : யார் படம் ஓடும்?

அடுத்த செய்திவீர ராகவன் எங்கய்யா? பீஸ்ட் டீம் போட்டோவை பார்த்து காண்டாகும் விஜய் ஃபேன்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.