திடீரென 'மன்மதலீலை' வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்…! விளக்கமளித்த பட குழு…!

மன்மத லீலை’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாத நிலையில் படதரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘
மன்மதலீலை
’. இந்த படத்தில் ஹீரோவாக
அசோக் செல்வன்
நடித்துள்ளார்.

அவருக்குஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த
மணிவண்ணன்
என்பவர் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.

நெட்டிசன் கேட்ட ‘ஒத்த’ கேள்வி: யாஷிகாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்…!

பிரேம்ஜி
இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட ஜாலியான படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த படத்தை பார்க்க
ரசிகர்கள்
ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.இதையடுத்து இந்த திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சொன்னபடி இந்த இன்று திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இதற்கு விளக்கமளித்துள்ள படக்குழுவினர், தொழில்நுட்ப காரணங்களால் திட்டமிட்டபடி காலை காட்சி மட்டும் வெளியிடப்படவில்லை. பிற்பகலில் நிச்சயம் திரைப்படம் வெளியாகும் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திஆண் நண்பருடன் படு நெருக்கமாக இருக்கும் வாரிசு நடிகை… தீயாய் பரவும் போட்டோஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.