பல தடைகளை தாண்டி வெளியான மன்மதலீலை..படம் எப்படி இருக்கு தெரியுமா?

வெங்கட் பிரபு
இயக்கத்தில் கடைசியாக வெளியான
மாநாடு
திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய
மன்மதலீலை
படம் இன்று வெளியாகிவுள்ளது.
அசோக் செல்வன்
ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அடல்ட் காமெடி வகையை சேர்ந்தது.

இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் இளைஞர்களை வெகுவாக ஈர்க்க இப்படத்தின் மீது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண இளைஞர்கள் பலர் ஆவலாக டிக்கெட் வாங்கி காத்திருந்தனர்.

பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர்…வெளியான தகவல்…!

ஆனால் இப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதால் இப்படம் இன்று காலை திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சில தொழில்நுட்ப காரணங்களால் இப்படம் திட்டமிட்டபடி காலை வெளியாகாமல் பிற்பகலில் இருந்து திரையிடப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் வெளியான இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகிவுள்ளது. படம் இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் இருக்கின்றதாம். வெங்கட் பிரபுவின் நகைச்சுவையான எழுத்து மற்றும் திரைக்கதை ட்விஸ்ட் இப்படத்தை தாங்கி பிடிக்கின்றது.

மேலும் குறிப்பாக அசோக் செல்வனின் நடிப்பும் அபாரமாக உள்ளது. பிரேம்ஜியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கின்றது. மொத்தத்தில் மன்மதலீலை படத்தின் மூலம் வெங்கட் பிரபுவின் வெற்றிப்பயணம் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திசமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.