3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

மார்ச் 31 ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அக்டோபர்-டிசம்பர் 2021 காலகட்டத்தில் மட்டும் சுமார் 11.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் மொத்த கடன் இந்த டிசம்பர் காலாண்டின் முடிவில் 614.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஆனால் இதேவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் வெளிநாட்டுக் கடன் அளவு மத்தியிலான அளவீடு செப்டம்பர் 2021 இறுதியில் 20.3 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

யூரோ மற்றும் யென் போன்ற பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது, வெளிநாட்டுக் கடனின் உயர்வைக் கட்டுப்படுத்த உதவியது குறிப்பிடத்தக்கது.

நாணய மதிப்பீட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றங்களின் விளைவைத் தவிர்த்தால், 2021 டிசம்பர் இறுதியில் 11.5 பில்லியன் டாலருக்கு பதிலாக வெளிநாட்டுக் கடனின் அளவு 13.2 பில்லியன் டாலராக அதிகரித்து இருந்திருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

டிசம்பர் 2021 இன் இறுதியில் வெளிநாட்டுக் கடனில் 52.0 சதவிகிதம் அமெரிக்க டாலர்களாகலும், ரூபாய் கடன் 32 சதவிகிதமாகவும், யென் நாணயத்தில் 5.3 சதவிகிதமும், யூரோவில் நாணயத்தில் 3.1 சதவிகிதமும் இந்தியா கடனாக வைத்துள்ளது.

வெளிநாட்டுக் கடனில் பெரும்பாலானவை பிரைவேட் பிரிவில் உள்ளது. அரசின் வெளிநாட்டுக் கடன் செப்டம்பர் 2021 இறுதியில் $132.0 பில்லியனில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதியின் முடிவில் 131.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், அரசு அல்லாத வெளிநாட்டுக் கடன் $471.4 பில்லியனில் இருந்து $483.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s external debt rises $11.5 billion at end of Dec 2021 to $614.9 billion

India’s external debt rises $11.5 billion at end of Dec 2021 to $614.9 billion 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

Story first published: Friday, April 1, 2022, 8:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.