சீனாவுக்கு செக்.. இந்தியா உடன் ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா திட்டம் என்ன..?!

இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார நட்புறவை அதிகரிக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் டான் டெஹானுடன் ஆகியோர் கையெழுத்திட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் இருந்தாலும் ஆஸ்திரேலியா சீனாவுக்கு மறைமுகமாகச் செக் வைத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா: புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் மீது வரி நீக்கம்..!

இந்தியா - ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

இந்தியா – ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

இந்தியா – ஆஸ்திரேலியா மத்தியிலான இப்புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியிலான தற்போது இருக்கும் 27 பில்லியன் டாலராக வர்த்தகம் அடுத்த 5 ஆண்டில் 45 பில்லியன் டாலார் வரையில் அதிகரிக்கும். சரி இந்த ஒப்பந்தம் மூலம் சீனாவுக்கு எப்படிச் செக்.

சீனா

சீனா

உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக விளங்கும் சீனா கடந்த 2 வருடத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் இதில் முக்கியமாகக் கொரோனா தொற்றை உலக நாடுகளுக்குப் பரவியதற்குச் சீனா தான் காரணம் எனக் குற்றம்சாட்டிப் பல நாடுகள் சீனாவிடம் சர்வதேச விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

வர்த்தகத் தடை
 

வர்த்தகத் தடை

இதன் பின்பு இரு நாடுகள் மத்தியிலும் பல்வேறு வர்த்தகத் தடைகள் விதித்தது, இதனால் ஆஸ்திரேலியாவை நம்பியிருந்த பல பொருட்கள் சீன பெற முடியாமல் போனது. இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மலிவுவிலை பொருட்களை ஆஸ்திரேலியா பெற முடியாமல் விலைவாசி உயர்வு பிரச்சனையைச் சந்தித்தது.

கொரோனா

கொரோனா

சீனா – ஆஸ்திரேலியா மத்தியிலான நட்புறவில் 2018 முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, அரசு, பல்கலைக்கழகம் மற்றும் ஊடகங்கள் உட்பட ஆஸ்திரேலியா சமூகத்தின் பல்வேறு துறைகளில் சீன அரசியல் ஆதிக்கத்தின் தலையீடு இருந்தது. இதில் தென் சீனக் கடல் சர்ச்சையும் அடக்கம்.

10 வருடங்கள்

10 வருடங்கள்

இந்த விரிசல் கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வெடித்து, இரு நாடுகளும் பல்வேறு வர்த்தகத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் சுமார் 10 வருடங்களாகச் செய்யப்பட்டு வரும் ஆலோசனையின் வாயிலாகத் தனது வர்த்தகத் தேவைகளை இந்தியாவுடன் தீர்த்துக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

குவாட் நாடுகள்

குவாட் நாடுகள்

உக்ரைன் பிரச்சனையில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு ஆஸ்திரேலியா ஆதரவு அளித்துத் தடை விதித்த நேரத்தில் குவாட் நாடுகளில் இருக்கும் ஆஸ்திரேலியா இந்தியா உடன் புதிய வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.

சீனாவுக்குச் செக்

சீனாவுக்குச் செக்

இந்த ஒப்பந்தம் மூலம் சீனாவுக்குப் பெரும் வர்த்தக இழப்பு மட்டும் அல்லாமல் தென்கிழக்கு நாடுகள் மத்தியில் சீனா தனது ஆதிக்கத்தை இழந்துள்ளதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிற்குச் செம லாபம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India – Australia signed Free trade deal big blow to china

India – Australia signed Free trade deal will boost trade to 45 billion USD in next 5 years, But its turned out to be big blow to china. 10 வருட போராததிற்குப் பின்பு இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியா சீனாவுக்குச் செக் வைத்துள்ளது. ஆஸ்திரேலியா திட்டம் என்ன..?!

Story first published: Saturday, April 2, 2022, 17:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.