யாஷிகாவுக்கு மாப்பிள்ளை ரெடி: அதிரடியாக அவரே வெளியிட்ட திருமண அறிவிப்பு

Tamil Cinema Actress Yashika Anand Marriage Update : நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் தனக்கு திருமணம் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016-ல் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து கவுதம் கார்த்திக்குடன் இணைந்து அடல்ட் காமெடி படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்சசியில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பெரிதாக படவாய்ப்பு இல்லை என்றாலும் விஜய் டிவியின் ரியாலிட் ஷோக்களில் பங்கேற்று வந்தார்.

மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் பலத்த காயத்துடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நலம் தேறியுள்ள யாஷிகா பிக்பாஸ் சீசன் 5-ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தற்போது ராஜா பீமா, நான் தான் உத்தமன் என்ற ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், தனது திருமணம்தொடர்பாக சமூகவலைதளங்களில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘நான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய அப்பா அம்மா சம்மதித்து விட்டார்கள் நான் செட்டில் ஆவதற்கான நேரம் இது நான் சினிமாவை நேசிக்கிறேன் என்ன நடந்தாலும் நான் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம் லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நடிகர் மகத்துடன் காதலில் விழுந்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மகத் வேறு ஒருவரை திருமம் செய்துகொண்டார். அதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் பங்கேற்ற நிரூப்புடன் யாஷிகா காதலில் இருந்தார். ஆனால் இந்த இரண்டு காதலும் கை கூடாத நிலையில், தற்போது தனது திருமணத்தை அறிவித்து்ளளார்.

இவரின் அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், யாஷகாவின் அறிவிப்பு சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேற்று ஏப்ரல் 1-ந் தேதி. ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால், யாஷிகா இந்த பதிவை விளையாட்டாக பதிவிட்டாரா அல்லது உண்மையாகவே அவருக்கு திருமணமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.