இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா; அதிபர் ஏற்க மறுப்பு

Sri lanka Prime Minister Mahinda Rajapaksa resigns: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக  உயர்ந்துள்ளது. இதனையடுத்து அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அதன்படி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. மேலும் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்: ‘அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த ஐயா ஸ்டாலின்…’ நெகிழ்ந்து போன சீமான்

இந்த நிலையில், இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கினார்.

ஆனால், மகிந்த ராஜபக்சே அளித்த ராஜினாமா கடித்தை ஏற்க இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.