‘காரி’: சசிகுமாரின் அதிரடி கிராமிய படம்!

உலகம் நவீனமயமாகி விட்டது என சொல்லிக்கொண்டாலும், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு குறைவதே கிடையாது.
அந்த வகையில், ஈரமும், வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களை ரத்தமும், சதையுமாக திரையில் பிரதிபலிப்பவர் சசிகுமார்.
அந்தவிதமாக மீண்டும் கிராம பின்னணியில் பிரம்மாண்டமான, ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக படமாக உருவாகிறது ‘காரி’ என்கிற புதிய படம்.
கதை நாயகன் சசிகுமாருக்கு இணையாக – கதாநாயகியாக தோன்றுபவர் பார்வதி அருண்.
இவர் மலையாளத்தில், ‘செம்பருத்திப்பூ’, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த, ‘ 21ஆம் நூற்றாண்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர், ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.
படத்தின் போஸ்டரே இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
காரியின் பெயரில் உருவாகும் இந்தப்படத்திற்கு சசிகுமார் போன்ற பொருத்தமான நடிகர் அமைந்து விட்டது சிறப்பான ஒன்று.
தற்போது கார்த்தி நடித்துவரும் சர்தார் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது படைப்பாக எஸ்..லஷ்மண் குமார் மிகுந்த பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய சிவ நந்தீஸ்வரன் இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
விரைவில் வெளியாகும் விதமாக படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
ஒளிப்பதிவு ; கணேஷ் சந்திரா
எடிட்டிங் ; சிவ நந்தீஸ்வரன்
கலை இயக்கம் ; மிலன்
சண்டைப் பயிற்சி ; அன்பறிவு
நிர்வாகத் தயாரிப்பு ; கிருபாகரன் ராமசாமி
தயாரிப்பு மேற்பார்வை ; A. பால் பாண்டியன்
மக்கள் தொடர்பு ; ஏ. ஜான்
 
வீடியோ:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.