பரபரப்பான சூழ்நிலையில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

இஸ்லமாபாத்:
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம்  செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 எம்பிக்களில் இம்ரான் கானுக்கு 140 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளுக்கு 200 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை 11.30 மணியளவில் கூடியது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 5க்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.