பூமியை நோக்கி சீறிப் பாய்ந்த விண்கல்லின் வீடியோ இணையத்தில் வைரல்

வானில் மிளிர்ந்தபடி விண்கல் ஒன்று பூமியை நோக்கி சீறிப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா நாக்பூரிலும், மத்திய பிரதேசத்தில் ஜாபுவா மற்றும் பர்வானி பகுதிகளில் விண்கல் விழுந்ததாக கூறப்படுகிறது. சூரியனைச் சுற்றும் பூமி தன் வருடாந்திர பயணத்தை நிறைவு செய்கையில் தூசு நிறைந்த விண்வெளி பாறைகளை கடக்கும் போது வளிமண்டலத்தில் பாறைகள் வேகமாக நுழைந்து இது போன்ற வானியல் நிகழ்வு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ராக்கெட் போல் விண்ணில் சீறிப்பாய்ந்து சில விநாடிகளில் வானில் ஜாலம் நிகழ்த்தி விண்கல் மறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

#WATCH | Maharashtra: In what appears to be a meteor shower was witnessed over the skies of Nagpur & several other parts of the state. pic.twitter.com/kPUfL9P18R

— ANI (@ANI) April 2, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.