மோடிக்கு எதிராக அணி திரளும் தென் மாநிலங்கள்… கேரளாவில் பிள்ளையார் சுழி!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பதை மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஆளுநர்களை கொண்டு, பாஜக அல்லாத மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து ஏதாவதொரு குடைச்சல் அளித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் மாநில சுயாட்சி மாநாட்டை வரும் 9 ஆம் தேதி (மார்ச் 9) நடத்த கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை கேரள அரசின் சார்பில் அந்த மாநில அமைச்சர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த வரிசையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்தார். அப்போது அவர், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழா, கடந்த பிப்ரவரி 28 சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதல்வர்
பினராயி விஜயன்
, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நூல் வெளியீட்டு விழா கிட்டதட்ட மாநில சுயாட்சி மாநாடு போல் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில். தற்போது கேரள மாநில அரசு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திசிறப்பு தரிசன டிக்கெட் – ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.