‘வேகமாக பரவும் புதிய கோவிட் XE’ – WHO சொன்ன அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான கோவிட் XE, முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இது, கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளை காட்டிலும் அதிவேகமாக பரவக்கூடியதாக தெரிகிறது. கோவிட் -19 சர்வதேச கவலையின் பொது சுகாதார அவசரநிலையாக உள்ளது. தற்போது கண்காணிப்பு வட்டத்தை குறைப்பது மிக விரைவு ஆகும் என தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், BA.1-BA.2 கலவையில் உருவான கோவிட் XE மாறுபாடு, முதலில் இங்கிலாந்தில் ஜனவரி 19 அன்று கண்டறியப்பட்டது. அன்றுமுதல், தற்போது வரை 600க்கும் அதிகமானோர் கோவிட் XE மாறுபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப நாள் மதிப்பீடுகளில் BA.2 உடன் ஒப்பிடும்போது, XE மாறுபாட்டின் சமூக வளர்ச்சி விகிதம் 10%ஆக உள்ளது. இதனை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என தெரிவித்துள்ளது.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட UN சுகாதார நிறுவனம், XE ஆனது Omicron மாறுபாட்டிற்கு சொந்தமானது. WHO தொடர்ந்து மற்ற SARS-CoV-2 வகைகளுடன், மறுசீரமைப்பு வகைகளுடன் தொடர்புடைய பொது சுகாதார அபாயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து மதிப்பிடுகிறது. கூடுதல் சான்றுகள் கிடைக்கும்போது புதிய அப்டேட்டை வழங்கும் என தெரிவித்தது.

கோவிட் -19 வாராந்திர தொற்றுநோயியல் வெளியிட்ட அப்டேட்படி, கடந்த வாரம் கோவிட் -19 இலிருந்து இறப்புகள் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனெனில், தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் இந்தியாவில் இறப்பில் மிஸ் செய்த எண்ணிக்கை சேர்த்துவருவது காரணமாக கருதப்படுகிறது.

ஜனவரி இறுதி மற்றும் மார்ச் 2022 இன் தொடக்கத்தில், புதிதாக கொரோனா தொற்று பதிவாகும் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO-வின் ஆறு பிராந்தியங்களில், 10 மில்லியனுக்கும் அதிகமான புதிய கொரோனா பாதிப்புகளும், 45 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆனால், அனைத்து பிராந்தியங்களிலும் வாராந்திர பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 4 பிராந்தியங்களில் குறைந்துள்ளது. மார்ச் 27 தகவலின்படி, உலகளவில் 479 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 6 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

வாராந்திர கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக தென் கொரியாவில் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இது 13 சதவீதம் குறைவு தான். ஜெர்மனியில் 15 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது 2 சதவீதம் அதிகமாகும். வியட்நாமில் 11 லட்சம் பேரும், பிரான்ஸில் 8 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாராந்திர கொரோனா இறப்பை பொறுத்தவரை, சிலி நாட்டில் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது 1710 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் 5,367 பேரும், இந்தியாவில் 4,515 பேரும், ரஷ்யாவில் 2,859 பேரும், தென் கொரியாவில் 2,471 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தென்-கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மொத்தமாக 232,000 புதிய வாராந்திர பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைவுதான்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பல உறுப்பு நாடுகளால் SARS-CoV-2 சோதனையில் சமீபத்திய குறிப்பிடத்தக்க குறைப்பு கவலையை ஏற்படுத்துகிறது. இது, வைரஸ் எங்குள்ளது? எவ்வாறு பரவுகிறது எவ்வாறு உருவாகிறது என்பதைக் கண்காணிக்கும் எங்கள் கூட்டுத் திறனைத் தடுக்கிறது. தொற்றுநோயின் கடுமையான கட்டத்தை திறம்பட முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியமானதாக இருக்கும் தகவல் மற்றும் பகுப்பாய்வு தான்.

SARS-CoV-2 இன் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். குறிப்பாக, பொது சுகாதாரம் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதிகளிலும், தடுப்பூசி செலுத்துதல் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகும். , குறைக்கப்பட்ட சோதனை, வளர்ந்து வரும் மாறுபாடுகளை முன்கூட்டியே கண்டறியும் நாடுகளின் திறனை பாதிக்கிறது,

கோவிட்-19 என்பது சர்வதேச கவலையில் பொது சுகாதார அவசரநிலையாக உள்ளது. கண்காணிப்பின் தரத்தை குறைதிருப்பது “மிக விரைவு ஆகும் என குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.