Post Office: பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபீஸ்… 8 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரியுமா?

சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டாகவும், நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்த பணத்தை, குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

இந்த திட்டத்தில் தான், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் அதிகப்பட்ச வட்டி கிடைக்கிறது. இதன் வட்டி வகிதம் 7.6 ஆகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்காக செயல்படுகிறது. இதில் முதலீடு செய்யும் தொகை 9.47 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறிவிடும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 ஆகும். இந்த திட்டத்தில், உங்களது பணம் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

PPF திட்டம்

போஸ்ட் ஆபீஸ் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 ஆகும். இந்த திட்டத்தில் உங்களது பணம் 10.14 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

மாத வருமானத் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் மாத வருமானத் திட்டத்தின் வட்டி விகிதம் 6.6 ஆகும். இதில் உங்களது பணம் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும்.

தேசிய சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபீஸ் தேசிய சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 ஆகும். இது 5 ஆண்டு முதிர்ச்சி திட்டமாகும். இதில் முதலீடு செய்தால், உங்க பணம் 10.59 ஆண்டில் இரட்டிப்பாகும்.

டைம் டெபாசிட் திட்டம்

1 முதல் 3 வருட கால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இதில், உங்கள் பணம் இரட்டிப்பு ஆக 13 ஆண்டுகள் ஆகலாம். அதே சமயம், 5 ஆண்டு திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே, அதில், முதலீட்டு பணம் 11.5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.8 ஆகும். இதில் உங்களது பணம் 12.41 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

சேமிப்பு வங்கி கணக்கு

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு வங்கி கணக்கில் 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்த தொகை 18 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.