உக்ரைன் ராணுவத்தை கண்டு அலறும் ரஷ்ய வீரர்கள்! பதிலடி தரமுடியாத கடுப்பில் இறுதியாக மேற்கொண்ட வெறியாட்டம்


ரஷ்ய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் நிலவியதில் இருந்து ரஷ்ய படைகளை கண்டு அஞ்சி நடுங்கிய உக்ரைன் ராணுவம், தற்போது ரஷ்ய படைகளை அலறவிட்டு வருகிறது.

பீதியில் ரஷ்ய படை வீரர்கள்

போர் தொடங்கி சுமார் 6 வாரங்கள் ஆன நிலையில் உக்ரைன் ராணுவத்தினரை கண்டு ரஷ்ய படை வீரர்கள் பயந்து பின்வாங்மும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கீவ்வின் வடக்கே உள்ள பகுதியை மீட்டெடுக்க உக்ரேனிய படைகள் எச்சரிக்கையுடன் நகர்ந்தன.உக்ரைன் படைகள் புச்சா நகரை கைப்பற்றியன.

இதையும் படிங்க: ரஷ்யாவின் அடுத்த குறி இதுதான்! முக்கிய தகவலை வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

ரஷ்யப் படைகளிடமிருந்து பிரதேசத்தை மீட்டெடுத்த பிறகு ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தங்களது படைகளை உக்ரைன் நிறுத்தியது.

கொத்து கொத்தாக கொல்லப்பட்ட பொதுமக்கள்

இந்நிலையில் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் சுற்றி உள்ள பகுதிகளை உக்ரைன் ராணுவம் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அங்கிருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள், அப்பாவி மக்கள் 410 பேரை படுகொலை செய்து புதைகுழிகளில் வீசிவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் கைப்பற்றியதால், பதிலடி கொடுக்காமல் முடியாமல் உக்ரைன் அந்த பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் இறுதியாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது.

அதன்படி சடலங்கள் கொத்து கொத்தாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல சடலங்கள் முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு, வெள்ளை துணியால் சுற்றப்பட்டு இருந்தது.

கொடூரமாக மக்களை கொன்ற ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யப் படைகள் “இனப்படுகொலை” செய்வதாகக் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.