முதல் நாளே சர்பிரைஸ் தான்.. தங்கம் விலை குறைந்திருக்கு..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது.

கடந்த வார இறுதியில் ஏப்ரல் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆன நிலையில், தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவியது.

இதற்கிடையில் சமீபத்தில் தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தினை உடைத்து பின் சரிந்துள்ள நிலையில், மீண்டும் அந்த உச்சத்தினை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை மீடியம் டெர்மில் குறையலாம்.. நிபுணர்களின் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

தங்கத்தின் தேவை சரிவு

தங்கத்தின் தேவை சரிவு

சமீபத்திய உச்சமான 2070 டாலர்களை உடைத்துக் காட்டிய நிலையில், இன்று 1919 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பா? நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது முந்தைய வாரத்தில் கண்ட ஏற்றம் எல்லாம் சரிந்துள்ளது. பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையானது குறைந்துள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது சுமூக நிலையை எட்டி வரும் நிலையில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது குறைந்துள்ளது.

நல்ல விஷயம் தானே

நல்ல விஷயம் தானே

குறிப்பாக சுமூக பிரச்சனைக்கு மத்தியில் ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் தலை நகர் கியூவில் இருந்து, பகுதியளவு வெயேற்றுவதாகவும் சமீபத்தில் கூறியது. இந்த நிலையில் ரஷ்யா படைகள் படிப்படியாக வெளியேறி வருவதையும் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் அதிகரிப்பு
 

வட்டி விகிதம் அதிகரிப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது அதன் வட்டி விகிதத்தினை வரவிருக்கும் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலை மீடியம் டெர்மில் குறைய காரணமாக அமையலாம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. ஆக டாலர் மதிப்பில் ஏற்படும் சிறு மாற்றம் கூட தங்கம் விலையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது ஒரு ரேஞ்ச் பவுண்டில் காணப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை மீடியம் டெர்மில் சரிய காரணமாக அமையலாம்.

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா – உக்ரைன் இடையேயான சுமூக பேச்சு வார்த்தகையானது தங்கம் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் இது குறித்தான சில சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இது குறித்த முன்னேற்றங்கள், அறிவிப்புகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தங்கம் விலையானது இந்த வாரத்தில் 1900 டாலர்கள் என்ற லெவலை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்காவின் தரவு

அமெரிக்காவின் தரவு

அமெரிக்காவில் மீண்டும் பணவீக்கம் என்பது மீண்டும் கவலையளிக்கும் ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பத்திர சந்தையும் தங்கம் விலையில் மீடியம் டெர்மில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

ரூபாய் Vs டாலர்

ரூபாய் Vs டாலர்

தங்கம் விலையினை இந்திய சந்தையில் எதிரொலிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான ரூபாயின் மதிப்பானது, உக்ரைன் ரஷ்யா இடையேயான சுமூக பேச்சு வார்த்தைக்கு இடையில், கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது வலுவடைந்துள்ளது. எனினும் மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உயரத் தொடங்கினால் அது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

 டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

ஃபண்டமெண்டல் காரணிகள் சில தங்கத்திற்கு எதிராகவே உள்ளன. இதன் காரணமாக டெக்னிக்கலாக இன்று சரியலாம் எனும் விதமாகவே உள்ளன. நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது குறைந்த விலையில் வாங்கும்போது இன்னும் சற்று லாபம் அதிகரிக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 3.80 டாலர்கள் குறைந்து, 1919.90 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாக காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது.ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.15% அதிகரித்து, 24.690 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதற்கிடையில் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அழுத்ததினை கண்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 163 ரூபாய் குறைந்து, 51,443 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 122 ரூபாய் குறைந்து, 66,611 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 4803 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 38,424 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 5,240 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 184 ரூபாய் குறைந்து, 41,920 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 71.40 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 714 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 71,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது பணவீக்கம் குறித்தான தரவு, டாலர் மதிப்பு, பத்திர சந்தை,ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை, தேவை உள்ளிட்ட பல காரணிகள் தீர்மானிக்கலாம். ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 4th, 2022: Key things that may dictate gold price in short term

gold price on April 4th, 2022: Key things that may dictate gold price in short term/முதல் நாளே சர்பிரைஸ் தான்.. தங்கம் விலை குறைந்திருக்கு..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

Story first published: Monday, April 4, 2022, 11:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.