மேக்கப் இல்லாத ஃபரீனா வெண்பா.. இவங்க என்ன பண்ணாலும் வைரல் ஆகுதே!

சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.

டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார்.

ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் பாரதியின் தோழியாக, டாக்டர் வெண்பாவாக வரும் இவரது கதாபாத்திரம் அவரை தமிழ் சீரியல் உலகில், நம்பிக்கைக்குரிய எதிரிகளில் ஒருவராக்கியது.

29 வயதான ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

தன் கர்ப்பத்தை வெளி உலகத்துக்கு அறிவித்தது முதல், தான் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா, தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலும் கர்ப்ப காலத்தில்’ ஃபரினா எடுத்த சில போட்டோஷூட்கள் பல விமர்சனங்களையும் கிளப்பியது. ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஃபரினா வழக்கம்போல மாடலிங், நடிப்பு என ஓடிக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஃபரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் எட்டி அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பது போல், தன்னுடைய ஒரு மாதமே ஆன குழந்தைக்கு சயன் லாரா ரஹ்மான் என பெயரிட்டு, விதவிதமாக போட்டோஷூட்கள் எடுத்து’ அதையெல்லாம் ஃபரினா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாமே பயங்கர வைரலாகியது.

இப்போது ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அதில் வெண்பா, வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடையில், துளியும் மேக்கப் இல்லாமல், தன் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். பார்க்கும் போது, தூங்கி எழுந்து அப்படியே இந்த படங்கள் எடுத்தாக தெரிகிறது.

இது இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் சோ கியூட் பேபி, லட்டு, சயன் குட்டி, தங்கமயிலு என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.