இந்தியாவிலேயே மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான ஹெச்டிஎப்சி-யின் மிக முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை நடந்த நிலையில், இக்கூட்டத்தில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தை ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஹெச்டிஎப்சி நிர்வாகக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி, செபி மற்றும் பிற அரசு அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
350 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்டிஎப்சி அசத்தல்..!

ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி
வீட்டுக் கடன் பிரிவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகவும், இப்பிரிவில் அதிகப்படியான வருவாய் லாபத்தைப் பெறும் நிறுவனமாக விளங்கும் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைவது இரு தரப்புக்கும் மிகப்பெரிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கிக்கு அதிகப்படியான நன்மை உள்ளது.

ஹெச்டிஎப்சி நிர்வாகம்
ஹெச்டிஎப்சி தனியாக இயங்கும் காரணத்தால் ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டு கடன் சேவை இல்லை, இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. தற்போது இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை இருவரும் பெற முடியும் என்பதால், இந்த இணைப்பிற்குப் பின்பு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை ஹெச்டிஎப்சி நிர்வாகம் பெற முடியும்.

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி தனது வங்கி சேவையில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து ரிசர்வ் வங்கியின் தடைகளில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள நிலையில் கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற பணியாற்றி வரும் நிலையில் ஹெச்டிஎப்சி உடனான இணைப்பு புதிய சக்தியை கொடுக்கும்.

பங்கு பரிமாற்றம்
25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு 42 ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் அடிப்படையில் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரீடைல் பங்கு தாரர்களுக்கும் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்குப் பின்பு பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.

52 வார உயர்வு விரைவில்
ஹெச்டிஎப்சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் 15 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 13.56 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் இரு நிறுவனப் பங்குகளும் 52 வார உயர்வை எட்டியுள்ளது.

ஹெச்டிஎப்சி சொத்துக்கள்
இன்றைய நிலையில் ஹெச்டிஎப்சி நிறுவனத்திடம் 6.23 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான சொத்துக்களும், ஹெச்டிஎப்சி வங்கியிடம் 19.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள்
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியிடம் 6.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும்.
HDFC announces merger with HDFC bank; How many shares will investors get? – full details
HDFC announces merger with HDFC bank; How many shares will investors get?. The proposed transaction will help leverage and create meaningful value for various stakeholders. ஹெச்டிஎப்சி + ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு.. ஆர்பிஐ பதில் என்ன..? முதலீட்டாளர்களுக்கு ஏகப்பட்ட லாபம்..!