நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு, மிகப்பெரிய சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பெரும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
அதுவும் முதல் வர்த்தக நாளே ஏற்றத்தில் இருப்பது மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த ஏற்றம் இனியும் தொடருமா? அல்லது மீண்டும் சரிவினைக் காணுமா?
இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தைகள்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. எனினும் ஆசிய சந்தைகள் சில சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.

அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 1909.78 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 183.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சமீப வர்த்தக நாட்களாக அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 353.09 புள்ளிகள் அதிகரித்து, 59,629.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 33.70 புள்ளிகள் குறைந்து 17,636.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 599.50 புள்ளிகள் அதிகரித்து, 59,876.19 புள்ளிகளாகவும், நிஃப்டி 150.40 புள்ளிகள் அதிகரித்து, 17,820.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 2018 பங்குகள் ஏற்றத்திலும், 347 பங்குகள் சரிவிலும், 106 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் தனலட்சுமி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டிஎஃப்.சி வங்கி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பி.ஹெச்.இல்.எல், மணப்புரம் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.

இன்டெக்ஸ் நிலவரம்
இன்டெக்ஸில் பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி அதிகபட்சமாக 3% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ்,பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி,ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, எம் & எம், ரிலையன்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி,ஹெச்.டி.எஃப்.சி வங்கி,பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், லார்சன் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, எம் & எம், ரிலையம்ஸ், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சற்று ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது 10.01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1198.74 புள்ளிகள் அதிகரித்து, 60,475.43 புள்ளிகளாகவும், நிஃப்டி 321.45 புள்ளிகள் அதிகரித்து, 17,991.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex jumps above 1100 points, focus in HDFC, HDFC bank
opening bell: sensex jumps above 1100 points, focus in HDFC, HDFC bank /1100 புள்ளிகளுக்கு மேல் எகிறிய சென்செக்ஸ்.. துள்ளிக் குதிக்கும் முதலீட்டாளர்கள்..!