14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் விழா; திருப்பதி தேவஸ்தானம் தலைவர் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் தீவுத் திடலில் ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணி முதல் ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அதற்காக, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டு வரப்படும் என்று விழாவில் அனைவருக்கும் இலவச அனுமதி என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி என்று கூறினார்.

சென்னையில், பூமி பூஜைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.வி.சுப்பா ரெட்டி, “சென்னையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவாரி கல்யாணம் நடத்தப்படுகிறது. 33 ஏக்கர் பரப்பளவில் இந்த திருக்கல்யாணத்தில் ஒரே நேரத்தில் 1.5 லட்சம் பேர் பக்தர்கள் பங்கேற்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திருமலைக்கு மக்கள் செல்ல முடியவில்லை, அதனால்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி கல்யாண உற்சவத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மைதானம் முழுவதும் தரைவிரிப்புகள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், சென்னை தீவுத் திடலில் நடைபெறும் ஸ்ரீவாரி உற்சவத்தை அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் சிலைகள் சாய்வுதளத்தில் வைக்கப்பட்டு நடுவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு, ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பழம் மற்றும் ஒரு கோவிந்த நாமாவளி கையேடு வழங்கப்படும் என்று ஒய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

ஸ்ரீவாரி உற்சவ விழாவில் வரும் பக்தர்கள் தீவுத்திடலில் உள்ளே வருவதற்கு நுழைவாயில் அண்ணாசாலை பக்கம் இருக்கும். கன்னியாகுமரி, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இதே போன்ற உற்சவங்களை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிசி) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறுகையில், திருப்பதிக்கு தினசரி தரிசன டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஒரு நாளைக்கு 150 டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கமிட்டி பெறுகிறது ஒவ்வொரு டிக்கெட்டும் 300 ரூபாய். டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரியுள்ளோம். மேலும், அவர்கள் ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று சந்தீப் நந்தூரி கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை சென்னை தீவுத்திடலில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவருடன், திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளுர் ஆலோசனைக் குழுவின் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் இருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.