Great Resignation இன்னும் முடியவில்லை.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட், ஐடி நிறுவனங்கள் தலைவலி..!

இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் ஐடி துறையில் கடந்த 1 வருடமாக இத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை ஐடி ஊழியர்களின் அதிகப்படியான ராஜினாமா தான்.

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. 7 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!

இதைத் தான் Great Resignation எனக் குறிப்பிடப்படுகிறது.

 புதிய வேலைவாய்ப்பு

புதிய வேலைவாய்ப்பு

புதிய வேலைக்குச் செல்லும் முன்பு கையில் 2 முதல் 3 வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு அதிகப்படியான சம்பளம் பெறுவது மட்டும் அல்லாமல் பெற்ற வேலையைத் தூக்கி எரியும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்கள் பணியில் சேரும் வரையில் நிச்சயமற்ற நிலையும் நிலவுகிறது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

இதற்கு முக்கியக் காரணம் தற்போது ஐடி நிறுவனங்கள் பெற்றுள்ள அதிகப்படியான திட்டங்களை நிர்வாகம் செய்யப் போதுமான ஊழியர்கள் இல்லாதது தான். சந்தையில் ஐடி ஊழியர்களுக்கு இருக்கும் அதிகப்படியான டிமாண்ட்-ஐ உணர்ந்த ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளத்திற்காகப் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி செல்ல துவங்கினர்.

வெளியேற்ற விகிதம்
 

வெளியேற்ற விகிதம்

இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமானக் காரணத்தால் வெளியேற்ற விகிதம் 20 சதவீதத்தைத் தாண்டியது. இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள் ப்ராஜெக்ட்-ஐ சரியான முறையில் நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

Great Resignation நிலை

Great Resignation நிலை

இந்த Great Resignation நிலை சற்று மாறியது எனக் கருது நிலவிய நிலையில் இதை மொத்தமாக உடைத்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ஆய்வு. சமீபத்தில் உலகளவில் வேலைவாய்ப்பு சேவையை அளிக்கும் Randstad NV செய்த ஆய்வில் Great Resignation நிலை கொஞ்சம் கூடத் தனியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

சந்தையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் நீண்ட காலத் திட்டங்களில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தும் காரணத்தால் திறன் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தாலும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தாலும் தொடர்ந்து ஊழியர்கள் நிறுவனங்களை மாற்றி வருகின்றனர் என Randstad NV நிறுவனத்தின் சிஇஓ ஸ்டான்டர் தெரிவித்துள்ளார்.

உடனே ராஜினாமா

உடனே ராஜினாமா

இதேபோல் போல் ஊழியர்கள் மத்தியில் தற்போது தங்களது வேலை பிடிக்கவில்லை எனில் உடனே பணியை ராஜினாமா செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களை மகிழ்ச்சியாக வைக்கவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

80 - 120 சதவீத சம்பள உயர்வு

80 – 120 சதவீத சம்பள உயர்வு

இந்த Great Resignation காலம் எந்த அளவிற்கு நிறுவனங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிறதோ, அதை அளவிற்கு ஊழியர்களுக்குப் பெரும் லாபமாக உள்ளது. இந்த Great Resignation நிலை ஐடி துறையில் தான் அதிகமாக உள்ளது. 20 முதல் 30 சதவீதம் சம்பள உயர்வைப் பெறும் ஐடி ஊழியர்கள் தற்போது 80 முதல் 120 சதவீத சம்பள உயர்வைப் பெறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Good news for IT employees: Great Resignation is not end; IT employees gets 120 percent salary hike

Good news and good opportunity for IT employees for next few months, Randstad survey says Great Resignation is not ended. Still, employee demand is high so IT and tech employees gets upto 120 percent salary hike now. Great Resignation இன்னும் முடியவில்லை.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

Story first published: Monday, April 4, 2022, 12:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.