அதை மட்டும் செய்யாதீங்க சிம்பு…ரசிகர்கள் வேண்டுகோள்..!

கடந்தாண்டு வரை சிம்புவை விமர்சிக்காதா ஆளே கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். தான் நடித்த படங்கள் வெளிவராமல், வெளிவந்தாலும் வெற்றிபெறாமல், உடல் எடை கூடி பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார் சிம்பு. இந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து
சிம்பு
கிடைத்த நேரத்தை பயன்படுத்தி தன் உடல் எடையை அதிரடியாக குறைத்து பழைய சிம்புவாக மாறினார்.

அதன் பின் அவர் நடித்த
ஈஸ்வரன்
படத்தில் சிம்பு பத்து வயது குறைந்தவரை போல் காட்சியளித்தார். மேலும் சிம்பு படப்பிடிப்பிற்கு வரமாட்டார் என்று விமர்சித்து வந்தவர்களுக்கு ஈஸ்வரன் படத்தை குறுகிய காலத்தில் முடித்து கொடுத்து விமர்சனங்களுக்கு பதிலளித்தார் சிம்பு.

ஒருவேளை பீஸ்ட் படத்துல விஜய் நடிக்கலனா இதுதான் நடந்திருக்கும்:நெல்சன்

அதையடுத்து இவர் நடித்த
மாநாடு
திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று சிம்புவை மீண்டும் முன்னணி நாயகர்களின் வரிசையில் அமரச்செய்தது. இந்நிலையில் தற்போது சிம்பு கெளதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்,
பத்து தல
ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

சிலம்பரசன்

இதில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் இப்படம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சிம்பு உடல் எடையை குறைப்பதற்கு முன் கமிட்டான திரைப்படம் தான் பத்து தல. கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சிம்பு சற்று உடல் எடை அதிகமாக இருக்கும்போது அதிக காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஆனால் தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போயிருக்கின்றனர். எனவே மீதமுள்ள பத்து தல படத்தின் படப்பிடிப்பிற்காக சிம்பு மீண்டும் உடல் எடையை அதிகரிக்கப்போவதாக தகவல்கள் வந்தன.

சிலம்பரசன்

இதனைக்கேட்ட சிம்பு ரசிகர்கள் பதறிப்போயிருக்கின்றனர். என்ன இருந்தாலும் உடல் எடையை மட்டும் மீண்டும் அதிகரிக்காதீர்கள் சிம்பு என அவருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BEAST TEASER : ‘வெயிட்டு காட்டிரலாமா’ மாஸ் காட்டும் சன் பிக்ச்சர்ஸ்

அடுத்த செய்திஅக்காவிடம் இருந்து ‘அந்த’ பழக்கத்தை பழகிய சவுந்தர்யா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.