குவைத்தில் விஜயின் “பீஸ்ட்” படத்திற்குத் தடை! ஏன்? என்ன காரணம்?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான “பீஸ்ட்” திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், குவைத் நாட்டில் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஜயின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான “பீஸ்ட்” ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் குவைத்தில் உள்ள ரசிகர்கள் படத்தைப் பார்க்க வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. குவைத் நாட்டில் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம், பணயக்கைதிகள் அடிப்படையிலான திரில்லர் படமாக உருவாகி உள்ளது. குவைத்தின் நலன்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்சிகளை “பீஸ்ட்” காட்டுவதால் படத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Beast (2022) - IMDb

முன்னதாக, துல்கர் சல்மானின் குருப் மற்றும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் ஆகிய படங்களை திரையிட குவைத் அரசு தடை விதித்தது. பொதுவாக அரபு நாடுகளை தீவிரவாதிகளின் தாயகமாக காட்டும் படங்களுக்கு குவைத்தில் க்ளீன் சிட் கிடைக்காது. இது “பீஸ்ட்” டீமுக்கு பெரும் அடியாக அமையலாம். இது வெளிநாட்டு வசூலை பாதிக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அரபு நாடுகளில் பீஸ்ட் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் விஜய் RAW அதிகாரி வீர ராகவன் வேடத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.