தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை! அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

சென்னை: டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில்  பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கூறினார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விலைவாசிகளும் தாறுமாறாக உயரத்தெடங்கி உளளதல், சாமனிய மக்கள் அவஸ்தபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகஅரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும், காலநிலைக்கு தகுந்தவாறு மின்கட்டணம், பேருந்து கட்டணங்கள் உயர்வது வாடிக்கையானது என அமைச்சர் நேரு தெரிவித்திருந்தார். இதனால், விரைவில் மின்கட்டணம், பேருந்து கட்டணம் உயரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,  மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழ்நாட்டில் இதுவரை பேருந்து கட்டணங்கள்  உயர்த்தப்படவில்லை,  தற்போதைக்கு அதற்கான வாய்ப்பில்லை என்று  தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறைக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்இ  சென்னையில் 2000 அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுப்டத்துடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும். இந்தப் பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

“தமிழகத்தில் எலெக்ட்ரிக் பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள், அதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளிக்க போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது”

புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும்,  போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.