கிண்டர் ஜாய் மூலம் வினோத நோய் பரவுவதாக வந்த புகாரை அடுத்து நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு

லண்டன்: கிண்டர் ஜாய் தயாரிப்புகள் உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஃபெரெரோ, தனது தயாரிப்புகளில் ஒன்று உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற புகார்களை அடுத்து சந்தையில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

லண்டனிம் உணவு பாதுகாப்பு ஏஜென்சி (FSA) சில கிண்டர் பிராண்ட் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. கிண்டரின் உணவுப் பொருட்களுக்கும் சால்மோனெல்லா தொற்று பரவுவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக FSA சந்தேகித்துள்ளது.

இங்கிலாந்தின் FSA விடுத்துள்ள எச்சரிக்கை

UKHSA மற்றும் ஐரோப்பாவில் உள்ள வேறு சில சுகாதார நிறுவனங்களின் விசாரணையில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் இங்கிலாந்தில் பரவும் சால்மோனெல்லா தொற்றுக்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து, முன்னெச்சரிக்கையாக, ஃபெர்ரோ நிறுவனம், தன் தயாரிப்பை வாபஸ் பெற்று, விசாரணையை துவக்கியது. திரும்ப அழைக்கப்பட்ட தயாரிப்பு அதே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. எனினும், மற்ற கிண்டர் தயாரிப்புகளில் இந்த பிரச்சனை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா; இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்

பெரெரோ நிறுவனம் கூறியது என்ன?

கிண்டர் ஜாய் தயாரிப்பு நிறுவனமான பெரெரோ தனது தயாரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சால்மோனெல்லா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், Kinder Surprise தயாரிப்பின் சில தொகுதிகளை திரும்பப் பெறுவதாக நிறுவனம் கூறியுள்ளது. கிண்டர் சர்ப்ரைஸின் 20 கிராம் பாக்கெட்களில், Best Before 11 ஜூலை 2022 மற்றும் Best Before 7 அக்டோபர் 2022) என குறிப்பிடப்பட்ட பாக்கெட்டுகள் மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிண்டர் சர்ப்ரைஸ் தயாரிப்பை நீங்கள் வாங்கியிருந்தால், அதை சாப்பிட வேண்டாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதைப் பற்றி ஃபெரெரோ கன்ஸ்யூமர் கேர்லைனைத் தொடர்புகொண்டு உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

தயாரிப்பு குறித்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சில்லறை விற்பனைக் கடைகளில் வைக்கப்படும் என்று தாய் நிறுவனமான ஃபெரெரோ தெரிவித்துள்ளது. தயாரிப்புகள் ஏன் திரும்ப அழைக்கப்படுகின்றன என்ற விளக்கமும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சால்மோனெல்லாவை எவ்வாறு தடுப்பது?

சால்மோனெல்லா தொற்று பச்சை இறைச்சி, காய்ச்சாத பால், முட்டை, மாட்டிறைச்சி அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் பரவுகிறது என்று டாக்டர் அசோக் ஜிங்கன் கூறினார். இது தவிர,கலப்பட நீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலமும் சால்மோனெல்லா பாக்டீரியாவால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

இந்த பாக்டீரியாக்கள் இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. அதன் தொற்று பொதுவாக 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குளிர், தலைவலி, மலத்தில் இரத்தம் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

மேலும் படிக்க | சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.