கூகுள் மேப்பில் புதிய அப்டேட்| Dinamalar

சென்னை: சுங்கக் கட்டண சாலைகளில் சென்றால் எவ்வளவு செலவாகும், அதனை தவிர்த்துவிட்டு சாதாரண சாலைகளில் பயணித்தால் எவ்வளவு மிச்சம் என்பதை கூகுள் மேப் செயலி தனது புதிய அப்டேட்டில் கொண்டு வந்துள்ளது.

சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வைத்திருப்போருக்கு சுங்கக் கட்டணம் என்பது சுமையாக உள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் போன்ற நாட்களில் சுங்கச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்து செல்வதற்குள் பண்டிகையே முடிந்து விடுகிறது. சில சுங்கச்சாவடிகள் அனுமதிக்கப்பட்ட ஆண்டுகளையும் கடந்து கட்டணம் வசூலிப்பதாக புகாரும் உள்ளது.

இந்திய மக்களின் எண்ணத்தை அறிந்துகொண்டுள்ள கூகுள் மேப் செயலி தற்போது புதிய வசதியை தனது செயலியில் மேம்படுத்தியுள்ளது. கூகுள் மேப்பில் எங்கிருந்து எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடங்களை குறிப்பிட்டுவிட்டு வலது புறம் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தினால் வழிகள் என்ற விவரம் இருக்கும். அதனை அழுத்தினால் அதில் புதிதாக சுங்கக் கட்டண விபரங்கள் என்ற வசதியை இணைத்துள்ளனர்.

latest tamil news

உதாரணத்திற்கு சென்னை டூ திருச்சி வழியை தேர்ந்தெடுத்து சுங்கக் கட்டண விபரங்களை அழுத்தினால் சென்று சேர்வதற்குள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என காட்டுகிறது. அதற்கு மேலேயே சுங்கக் கட்டண சாலைகள் தவிர் என்ற வசதி தரப்பட்டு உள்ளது. அதனை தேர்ந்தெடுத்தும் பயணிக்கலாம். உள்ளூர் சுங்கச்சாவடிகளிடமிருந்து அவ்வப்போது விபரங்களை பெற்று துல்லியமாக வழங்குவதாக கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.