'பீஸ்ட்' டிரெய்லர் குறித்து ஷாருக்கான் போட்ட 'ஒத்த' ட்வீட்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி..!

விஜய்யின் ‘
பீஸ்ட்
‘ பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
. கடந்த சனிக்கிழமை வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. அதனை தொடர்ந்து விஜய் குரலில் வெளியான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் யூட்யூப்பில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

வரிசையாக வெளியான தாறுமாறு அப்டேட்ஸ்.. கொண்டாட்டத்தில் விஜயண்ணா ரசிகாஸ்..!

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வெளியான ‘பீஸ்ட்’ பட டிரெய்லரரை 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இந்த டிரைலரை இயக்குநர்
அட்லி
உடன் இணைந்து பார்த்து மகிழ்ந்ததாக நடிகர்
ஷாருக்கான்
போட்டுள்ள ட்வீட் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் அவர் என்னை விட தீவிரமான விஜய் ரசிகர் என அட்லி பற்றி ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அட்லி இயக்கத்தில் ‘லயன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். மேலும் இந்தப்படம் டிராப் ஆனதாக கடந்த சில வாரங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு ஷாருக்கானின் ட்விட்டால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் போட்ட ஒரு ட்வீட்.. தலைவருக்கா? தளபதிக்கா?

அடுத்த செய்திபீஸ்ட் படத்தில் சமந்தாவா? இது என்ன புது ட்விஸ்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.