ஹிஜாப்; கர்நாடக மாணவியை பாராட்டிய அல்கொய்தா; என் நாட்டு பிரச்சனையில் அவர்கள் ஏன் தலையிடுகிறார்கள்? – தந்தை கேள்வி

Kiran Parashar

Father of Karnataka girl ‘praised’ by Al Qaeda chief: ‘Who is he, why is he speaking about issues of my country’: “அவர் யார் என்று எங்களுக்கு தெரியாது, அவர் ஏன் என் நாட்டின் பிரச்சினையில் தலையிடுகிறார்,” இவை கர்நாடக ஹிஜாப் விவகாரம் குறித்த அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றிய முஸ்கன் கானின் தந்தை முகமது ஹுசைனின் வார்த்தைகள்.

செவ்வாயன்று அல் கொய்தாவின் பத்திரிக்கையான அஸ்-சஹாப் ஊடகம் வெளியிட்ட வீடியோவில், அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி, கர்நாடகாவில் பிப்ரவரி மாதத்தில் காவி சால்வை அணிந்த குழுவினரால் சூழப்பட்ட நிலையிலும், அல்லா-ஹு-அக்பர் என்று கோஷங்களை எழுப்பிய மாண்டியா மாணவி முஸ்கன் கானைப் பாராட்டியுள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் ஹுசைன், புதன்கிழமை பிற்பகலில் தான் இந்த விவகாரம் தனக்குத் தெரிந்ததாகக் கூறினார். மேலும், “அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது, என் மகளின் பெயரை கூறுவது தவறு. நான் என் நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் (அல்கொய்தா) நமது நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி பேசத் தேவையில்லை. அவர்கள் நமது அமைதியைக் கெடுக்கிறார்கள்,” என்றும் ஹூசைன் கூறினார்.

ஹுசைன் மேலும் கூறுகையில், “நான் மண்டியாவில் பிறந்தேன். நாங்கள் இங்கு சகோதரர்களைப் போல் வாழ்ந்து வருகிறோம். இச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது, இப்போது எங்களை நிம்மதியாக வாழ விடவில்லை. இந்த விவகாரத்தை அரசு ஆய்வு செய்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும்.

இதையும் படியுங்கள்: புதிய கொரோனா வகை XE மாறுபாடு; மும்பையில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு?

பிகாம் இரண்டாம் ஆண்டு மாணவியான முஸ்கான், மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரிக்கு அசைன்மெண்டை சமர்பிப்பதற்காக வந்திருந்தார்.

ஹிஜாப் அணிந்ததற்காக கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததால், தனது மகள் தேர்வெழுத முடியவில்லை என்று ஹுசைன் கூறினார். “அவள் அடுத்த வருடம் படிப்பைத் தொடருவாள். ஹிஜாப் அனுமதிக்கப்படும் இடத்தில் நான் அவளை படிக்க வைப்பேன், ”என்றும் ஹூசைன் கூறினார்.

அல் ஜவாஹிரியின் வீடியோவை முஸ்கானுடன் பார்த்ததாக ஹுசைன் கூறினார், மேலும் முஸ்கானும் கலக்கமடைந்தாள். “அவள் தனது கல்வியைப் பற்றி கவலைப்படுகிறாள், இந்த விஷயங்கள் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா புதன்கிழமை அல் ஜவாஹிரி வெளியிட்ட வீடியோ அறிக்கை ஹிஜாப் விவகாரத்தில் “மறைமுக கைகளின்” ஈடுபாட்டை நிரூபிக்கிறது என்று கூறினார்.

“நாங்கள் இதை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம், மேலும் ஹிஜாப் தீர்ப்பின் போது உயர்நீதிமன்றமும் ஹிஜாப் விவகாரத்தின் பின்னால் சில கண்ணுக்கு தெரியாத கைகளின் சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்தது … இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அல்-கொய்தா நபர்கள் வீடியோக்களை வெளியிடுகிறார்கள்,” என்று ஞானேந்திரா கூறினார். ஜவாஹிரி முஸ்கானைப் புகழ்வது குறித்த கேள்விக்கான பதில் இது.

“விஷயங்கள் எப்படி நடக்கின்றன, இணைப்பு என்ன. இந்த விஷயங்கள் அனைத்தும் காவல்துறையினரால் கவனிக்கப்படுகின்றன… அவர்கள் கண்டுபிடிப்பார்கள், ”என்றும் அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.