‘அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது’ – விஜய் கடும் எச்சரிக்கை

Actor Vijay Warning: நடிகர் விஜய் அவரது ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து நற்பணிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அரசியலில் இருந்து மட்டும் விலகியிருந்த அந்த இயக்கம், கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.

விஜய் நேரடியாக பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றாலும், அவரது புகைப்படம், விஜய் மக்கள் இயக்கம் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதியளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் உத்தரவு குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாரையும் எக்காலத்திலும் இழிவுப்படுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனை செய்யக்கூடாது. பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவான்மியூர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யும், முதல்வர் மு.க ஸ்டாலினும் சந்தித்துக்கொண்டர். இருவரும் பரஸ்பரமாக கை கொடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.