'அரசியல் தலைவர்களை விமர்சித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை' – நடிகர் விஜய் உத்தரவு

அரசு பதவியில் உள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் பகிர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பதவியில் உள்ளவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கை,  இணையதளங்கள்,  போஸ்டர் என எந்த தளத்திலும் பதிவிட கூடாது. அதேபோல் மீம்ஸ் உள்ளிட்ட எதையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளார். இது நடிகர் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டதோடு,  இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.  

Is Thalapathy Vijay building a new school to give free education to needy  children? | Tamil Movie News - Times of India

இருப்பினும், விஜய் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின்பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என அவர் கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் பல அரசியல் கட்சி தலைவர்களையும், அரசியல் கட்சியை சார்ந்தவர்களையும், பிற நடிகர்களையும் விமர்சித்து வருகின்றனர்.  அவர்களை கண்டிக்கும் விதமாக விஜய் உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.