ஐகோர்ட் வழக்கில் பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகளுக்கு பின்னடைவு: கூடுதல் மனுக்கள் தள்ளுபடி

சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே அமைந்திருக்கும் பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி 2015, 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வந்தது. கல்வி ஆஅண்டு முடியும் வரை, தமிழக அரசு கால அவகாசம் கோரியது.

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும் படி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்குகளை மார்ச் 16ல் விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

“எப்போது ஜேசிபி வீட்டு வாசலில் வந்து நிற்கும் என்ற கலக்கத்துடன் உறங்கச் செல்கிறோம்” – அச்சத்தில் பெத்தேல் நகர் மக்கள்

பிரதான வழக்கில் மட்டுமே இணை மனுதாரர்களாக இணைய முடியும் என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணை மனுதாரர்களாக இணைய முடியாது என்றும் கூறி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்தது. இது வரை 1052 வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 1007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த விசாரணையின் போது ஈஞ்சம்பாக்கம் கழவெளி பகுதியில் அமைந்திருக்கும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பெத்தேல் நகர் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளதால் அதனை அகற்றும் அரசின் முடிவு தவறல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.