சென்னைக்கு வந்த அடுத்த அமெரிக்க நிறுவனம்.. கேபிடஸ்..!

சென்னையில் கடந்த சில மாதத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது அலுவலகத்தைத் துவங்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கேபிடஸ் என்னும் நிறுவனம் சென்னையில் முதல் இந்திய அலுவலகத்தைத் துவங்கியுள்ளது.

கேபிடஸ்

அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நிதியுதவி வழங்கும் முன்னணி நிறுவனமான கேபிடஸ், இன்று சென்னையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது மூலம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளையும் சேவைகளையும் விரிவுபடுத்து உள்ளதாக அறிவித்து உள்ளது.

இந்திய விரிவாக்கம்

இந்திய விரிவாக்கம்

கேபிடஸ் நிறுவனத்தின் வளர்ச்சியின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விரிவாக்கம் வருகிறது. இந்திய விரிவாக்கத்தின் மூலம் இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதுமையான நிதி சேவைகளை வழங்க உள்ளது.

 சென்னை பெருங்குடி
 

சென்னை பெருங்குடி

கேபிடஸ் நிறுவனம் சென்னை பெருங்குடியில் உள்ள ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள 7,500 சதுர அடியில் மிகப்பெரிய அலுவலகத்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்தச் சென்னை அலுவலகத்தில் 100 ஊழியர்களுடன் திறக்கப்பட்டு உள்ளது.

 முக்கியப் பணிகள்

முக்கியப் பணிகள்

இந்தப் பெருங்குடி அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப செயலாக்கம், கடன் பகுப்பாய்வு, தரவு பகுப்பாய்வு, முன் கணிப்பு மாடலிங் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை இந்திய ஊழியர்கள் குழு மூலம் வழங்குகிறது.

புதிய ஊழியர்கள்

புதிய ஊழியர்கள்

2022 ஆம் ஆண்டு முழுவதும் கேபிடஸ் நிறுவனத்தில் சிறந்த திறமையாளர்களைத் தேடி நியமிக்கும் பணிகள் தொடரும். 20 புதிய முழுநேர ஊழியர்களை இந்தியாவில் 2022 ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்தவும், 2023 ஆம் ஆண்டில் கூடுதலாக 30 புதிய பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முரளி கோவிந்தராஜுலு

முரளி கோவிந்தராஜுலு

கபிடஸ் இந்தியாவின் வணிகத் தலைவராக முரளி கோவிந்தராஜுலு பணியாற்றுவார், இவரது தலைமையில் தான் சென்னை அலுவலகத்தை வழிநடத்தப்படும். உலகளாவிய செயல்பாடுகளை அளவிடும் விரிவான அனுபவம் முரளி கோவிந்தராஜுலு, இந்திய ஊழியர்கள் குழுவை வழிநடத்த அமெரிக்காவில் கேபிடஸ் தலைமையுடன் இணைந்து பணியாற்றுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kapitus An US based SME financing company Opens Office in Chennai Perungudi

Kapitus Opens Office in Chennai, Perungudi சென்னைக்கு வந்த அடுத்த அமெரிக்க நிறுவனம்.. கேபிடஸ்..!

Story first published: Thursday, April 7, 2022, 21:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.