தமிழக போலீசில் 444 எஸ்.ஐ பதவி: விண்ணப்பிக்க மேலும் 10 நாள் அவகாசம்

Tamilnadu News Update : தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகினறனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 444 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு கடந்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி முதல் ஏப்ரல 7 (இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என்ற பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் சரிவர இயங்கவில்லை.

இதனால்பெரும்பாலானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கடுமையான சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், பல பகுதிகளில் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு காவல்துறைக்காக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிபபவர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

அதன்படி வரும் ஏப்ரல் 17-ந் தேதி வரை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.