திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய் சந்திப்பு

நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக விஜயின் 66 வது படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார் . விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது . இந்த பூஜையில் விஜய் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர் .

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் AGS கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் இன்று கலந்துகொண்டார் . அதே நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார் . முதல்வர் ஸ்டாலினும் , விஜயும் சந்தித்துக்கொண்டு பேசியுள்ளார்கள் . இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.