ரூ.310.92 கோடி மதிப்பிலான 9 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 311 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒன்பது பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் 310 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 6 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட 9 மேம்பாலங்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
image

சென்னை-பொன்னேரிக்கரை-காஞ்சிபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், மதுரை சுற்றுச்சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள பல்வழிச்சாலை மேம்பாலம், பொள்ளாச்சி-கிணத்துக்கடவு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்வே மேம்பாலம், திருவண்ணாமலை- தண்டரை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்வே மேம்பாலம், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ஊரப்பாக்கம் சாலையில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், விழுப்புரம் மாவட்டம் கடலூர்-சித்தூர் சாலையில் கட்டப்பட்ட ரயில் மேம்பாலம். வேலூர் மாவட்டம் லத்தேரி-விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்வே மேம்பாலம், திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை- எரையூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், நெல்லை மாவட்டம் நாங்குநேரி-ஏர்வாடி- வள்ளியூர்- விஜயபாதி சாலையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் ஆகிய 9 பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.