இது எதுல போய் முடியப்போகுதோ? தனுஷுடன் போட்டி போடும் செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்
செல்வராகவன்
. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக அவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது.

தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதனிடைய இயக்குநர் செல்வராகவன் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன்.

கடவுளுடன் ஒப்பிட்ட விஜய்… எஸ்ஏசி செம ஹேப்பி… என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

அதனை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார் செல்வராகவன். பீஸ்ட் படத்தில் செல்வராகவனின் கேரக்டர் வெய்ட்டானது என ட்ரெயிலரிலேயே தெரியவந்தது. நானே வருவேன் படத்திலும் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார் செல்வராகவன்.

இந்நிலையில்
மோகன் ஜி
இயக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் செல்வராகவன். வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி. தற்போது புதிய த்ரில்லர் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் செல்வராகவன் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்.

திடீரென ‘அந்த’ போட்டோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா.. பரபரக்கும் இன்ஸ்டா!

மேலும் இந்தப் படத்தில் சதுரங்க வேட்டை, நம்ம வீட்டுப்பிள்ளை, கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ள நட்டியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் மோகன் ஜி, சர்ச்சைக்குரிய விஷயங்களை படமாக்கி வருகிறார். இந்நிலையில் அவர் இயக்கவுள்ள புதிய படமும் கடலூர், சேலம், கோவை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சனையை பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

BEAST தமிழகத்திலும் தடையா? – வலுக்கும் கோரிக்கைகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.