பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ‘ஷெபாஸ் ஷெரீப்’ தேர்வு…

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்த் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார்.  இதற்கு எதிர்ப்பதெரிவித்து, அவையில் இருந்து இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவரது அரசை கவிழ்க்க முயற்சி செய்தன. இதற்கு ஆதரவாக இம்ரான்கான் ஆதரவு கட்சிகள் இரண்டு, ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால்  பெரும்பான்மை இழந்த இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை அவர் எதிர்கொள்ளாமல் சபாநாயகர் மூலம் அவையை முடக்கி, ஆட்சியை கலைக்க முற்பட்டார். ஆனால், அந்நாட்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உத்தரவிட்டது.

இதையடுத்து,  நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இம்ரான் கான் பெரும்பான்மை இழந்ததை அடுத்து அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்கும்படி, எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கோரிக்கை விடுத்தன. அதைத்தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக எம்பிக்கள் ஒன்று கூடினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாப் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் வெளிநடப்பு செய்தார். “திருடர்களுடன்” சபையில் உட்கார மாட்டேன் என்று கூறி, தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்தார். அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் வாக்கெடுப்பை புறக்கணித்தது வெளிநடப்பு செய்தனர்.

புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ள ஷெபாஸ் ஷெரீப்ஹபுருக்கு அப்பாஸ் ஷெரீப் மற்றும் நவாஸ் ஷெரீப் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.