ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் விவகாரம் தொடர்பாக ஜேம்ஸ் பிராங்கிளினிடம் விசாரிக்க துர்ஹாம் அணி முடிவு…

அஸ்வின் ரவிச்சந்திரனுடன் “கம்பாக் டேல்ஸ்” என்ற தலைப்பில் கருண் நாயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது.

யுஸ்வேந்திர சாஹல்

இதில் பேசிய சாஹல் 2011 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடிய போது தன்னை ஜேம்ஸ் பிராங்கிளின் மற்றும் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் இருவரும் சேர்ந்து தன்னை உடல் ரீதியாக கேலி செய்ததாகவும்,

பின்னர் தன்னை கை கால்களை கட்டிப் போட்டதுடன் வாயையும் கட்டி ஹோட்டல் அறையில் தள்ளி இரவெல்லாம் சாத்திவிட்டு சென்றதாகவும், மறுநாள் காலை ஹோட்டல் பணியாளர்கள் மூலம் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.

அதேபோல் 2013 ம் ஆண்டு மற்றொரு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மதுபோதையில் தன்னை 15 மாடியில் தலைகீழாக தொங்கவிட்டு துன்புறுத்தியதாகவும் கூறினார், இருந்தபோதும் அந்த வீரர் யார் என்று குறிப்பிட மறுத்துவிட்டார்.

அந்த வீரர் யாரென்று என்று வீரேந்திர சேவாக், ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சாஹலிடம் கேள்வி எழுப்பினர், மேலும் இது போன்ற துன்புறுத்தலில் ஈடுபட்ட வீரரை வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பிராங்கிளின்

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த துர்ஹாம் கவுண்டி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ஜேம்ஸ் பிராங்கிளின் மீது சாஹல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து அவரது தரப்பு கருத்தை தனிமையில் விசாரிக்க இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பிராங்கிளின் 2011 முதல் 2013 ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார் என்பதும் தற்போது அவர் துர்ஹாம் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.