தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TANFINET recruitment 2022 for various posts apply soon: தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் (TAMILNADU FIBRENET CORPORATION LIMITED) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.04.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Manager

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : CA படித்திருக்க வேண்டும் மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 21 முதல் 41 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 1,00,000

Company Secretary

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Associate member of Institute of company secretaries மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 21 முதல் 41 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 1,00,000

Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி : B.E in ECE/EEE/E&I/Computer Science/IT மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

Associate consultant

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி : B.E in ECE/EEE/E&I/Computer Science/IT மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC; தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification%20Form%20and%20Application%20Format%20for%20Engagement%20of%20Consultants%20and%20Associate%20Consultants.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி : The Managing Director, Tamil Nadu Fibre Net Corporation Limited, Door No.807, 5th floor, P.T.Lee Chengalvaraya naicker Trust, Anna Salai, Chennai – 600 002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification%20Form%20and%20Application%20Format%20for%20Engagement%20of%20Consultants%20and%20Associate%20Consultants.pdf or https://tanfinet.tn.gov.in/sites/default/files/Employment%20Notification%20and%20Application%20Form.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.