தேனாம்பேட்டையில் மேம்பாலம், 435 தரைப்பாலங்கள் உள்பட 18 முக்கிய அறிவிப்புகள்! பொதுப்பணித்துறை அறிவிப்பு…

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே மேம்பாலம் மற்றும் மாநிலம் முழுவதும் 435 தரைப்பாலங்கள் உள்பட 18முக்கிய அறிவிப்பு களை சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை மானியக்கோரிக்கைமீது விவாதத்தின்போது ரூ.1105கோடி மதிப்பீட்டில் 435 தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்படும், 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என தெரி விக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து, பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர், காரியாப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் தொழிற்தட- துறைமுக சாலையை நான்கு வழித் தடச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ரூ.500 கோடி மதிப்பில் 23 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைத்தல் என்பது உள்ளிட்ட ஏராமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை நான்கு வழித் தடச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர், காரியாப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் தொழிற்தட- துறைமுக சாலையை நான்கு வழித் தடச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ் நடப்பாண்டில் 150 கி.மீ சாலைகளை நான்கு வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகளை இரு வழித்தடமாக வும் ரூ.2300 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை ரூ.485 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகரப்பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.45 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகரப்பகுதியில் பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் ரூ.322 கோடி மதிப்பிலும் பாடி மேம்பாலம் அருகில் உள்ள, ரயில்வே மேம்பாலத்தினை அகலப்படுத்துதல் பணி ரூ.100 கோடி மதிப்பிலும் தாம்பரம் சண்முகம் சாலை அருகே இணைப்புச் சாலை ரூ.10 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகரப்பகுதியில் 4 இடங்களில் ரூ. 56 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும்.

ரயில்வே மேம்பாலங்கள் ரயில்வே மேம்பாலங்கள் எட்டு மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்ட 7 இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2 மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.86 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

புறவழிச்சாலைகள் 23 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் – 2 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க ரூ.40 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

“அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து” என்ற முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் 435 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக ரூ.1105 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சுற்றுலா பகுதி சாலை மேம்பாடு உதகமண்டலம் நகருக்கு மாற்று பாதை ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் பக்தர்கள் பாதயாத்திரை செல்ல நடைபாதை மற்றும் கோவில் கிரிவலப் பாதை போன்ற பணிகள் ரூ.35கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

ஜமூனாமரத்தூர் மலைச்சாலை மற்றும் கொடைக்கானல் மலைச்சாலைகளை மேம்பாடு செய்ய ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.41.75 கோடி மதிப்பில் மீனவர் பகுதியில் கடலரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டப்படும் மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கை படி 47 கிராமங்களை இணைக்க புதிய இணைப்பு சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.75 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்படும்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசுமலையில் புதிய சாலை ரூ.26.33கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

வேலூர் சிஎம்சி எதிரில் சுரங்கபாதை மற்றும் கரூர் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க ரூ.25 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் – IIIன் மூலமாக 400 கிமீ. நீள முக்கிய மாநில சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்த பன்னாட்டு நிதி நிறுவன கடனுதவி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மூலம் படகுப் போக்குவரத்தை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்,

ராமேஸ்வரத்தில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.