11 காவல் நிலையங்கள் 274 காவலர் குடியிருப்புகள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் சிதம்பரம், கோயம்புத்தூர் மாவட்டம் கோவைபுதூர், திருப்பூர் மாவட்டம் மங்களம், சென்னை மாவட்டம் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 37 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, சென்னை மாவட்டம் பேசின் பிரிட்ஜ், அயனாவரம், பழவந்தாங்கல் மற்றும் அம்பத்தூர் (அனைத்து மகளிர் காவல் நிலையம்) திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் மருத்துவக் கல்லூரி, மகாராஜா நகர் மற்றும் விக்கிரமசிங்கபுரம், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி, கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில் 12 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 காவல் நிலையக்கட்டிடங்கள்.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், என 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல்துறை கட்டடங்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள்.

கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் 9 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 58 குடியிருப்புகள்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் என மொத்தம், 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டிடங்களை முதல்- அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். மக்கள் சேவையாற்றும் சில நிகழ்வுகளில் துறை பணி யாளர்கள் தங்களது உயிரைத் துறக்க நேரிடுகிறது.

1967-ம் ஆண்டு முதல் இதுபோன்று நிகழ்வுகளில் இதுவரை 33 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியின் நிமித்தமாக வீரமரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு வீரமரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14-ம் நாள் நீத்தார் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பணிநிமித்தம் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக சென்னை, எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநரக வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவு சின்னத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.