"இதற்கு என்னை கொன்று இருக்கலாம்" புடின் படையினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மூதாட்டி குமுறல்புடினின் ரஷ்ய படையினரால் 83 வயது உக்ரைனிய மூதாட்டி கற்பழிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து புடின் படையினருக்கு எதிராக அப்பாவி மக்கள் மீதான கொலை குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, கணக்கில் அடங்காத கற்பழிப்பு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ரஷ்ய படையினர் கண்ணில் படும் அனைத்து உக்ரைனிய பெண்களையும் சிறுமிகளையும் சூறையாடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், ஈவு இரக்கம், மனிதாபிமானம் இல்லாத, கொஞ்சமும் சகித்துக்கொள்ளமுடியாத ஒரு கற்பழிப்பு சம்பவம் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உக்ரைனில் மரியுபோலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடத்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக Vera என்று மட்டும் குறிப்பிடப்படும் பாதிக்கப்பட்ட 83 வயதாகவும் அப்பெண், தான் கற்பழிக்கப்பட்டதற்கு பதிலாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

சம்பவத்தை விவரித்த அவர், ஒரு ரஷ்ய வீரர் தன்னை கழுத்தின் பின்புறம் பிடித்ததாகவும், தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் போனதாகவும் கூறினார்.

ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான அவர், அந்த சிப்பாயிடம், “எனக்கும் ஏற்படும் அதே துன்பத்தை உங்களை பெற்ற தாய்க்கு நடக்க அனுமதிப்பீர்களா” என்று கேட்டதாகக் கூறினார், ஆனால் ரஷ்ய துருப்புக்கள் அவரது வாயை அடைத்துவிட்டதாக கூறினார்.

பின்னர், அவர் ஒரு ரஷ்ய சிப்பாயால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அதைவிட கொடுமை என்னெவன்றால், அவர் கற்பழிக்கப்படும்போது அவரது ஊனமுற்ற கணவர் வீட்டில் இருந்ததாக அவர் கூறினார். அவரையும் அந்த சிப்பாய் அடுத்து துன்புறுத்தியுள்ளார்.

துஷ்பிரயோகம் செய்துவிட்டு அந்த சிப்பாய் வோட்கா குடித்ததாகவும், அப்போது வேரா தனது ஆடைகளை மீண்டும் அணிந்துகொள்ளலாமா என்று கேட்டபோது, அணியக்கூடாது என மிரட்டியதாக அவர் கூறினார்.

பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறி தனது துப்பாக்கியால் வெளியில் மூன்று முறை காற்றில் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வேரா, இப்போது “நான் சாகவும் இல்லை, உயிரோடும் இல்லை” என்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

“ரஷ்யர்கள் என்னை அப்படிச் செய்ததற்கு பதிலாக, என்னைச் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற ஏராளமான சகித்துக்கொள்ளமுடியாத போர் குற்றங்களை ரஷ்யா படையினர் உக்ரைனியர்களுக்கு எதிராக மேற்கொண்டுவருகின்றனர் என்பதை பல சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.