ஈரோடு: சத்தியமங்கலத்தில் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்த கார்

சத்தியமங்கலத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் கார் புகுந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கோவை சாலையில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அவ்வழியே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்து, முன்பக்க மேஜை மற்றும் அடுப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரித்தபோது சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர் ஸ்ரீகாந்த் என்பவர் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றபோது, விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
image
இந்நிலையில் கார் விபத்துக்குள்ளான காட்சி அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த கார் விபத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.