உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், முடிவே இல்லாமல் தொடர்கிறது . ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. 

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாயன்று (ஏப்ரல் 12, 2022) ரஷ்யப் படைகள் வடக்கு உக்ரைனில் இருந்து பின்வாங்கிய பின்னர் முதல் முறையாக பொதுவில் போரைப் பற்றி உரையாற்றிய நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதன் “உன்னதமான” நோக்கங்களை அடையும் என்று உறுதியளித்தார். 

மேலும், போர் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை “முட்டுச்சந்தை” அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் பற்றிய போலியான கூற்றுக்கள் மற்றும் உக்ரைன் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் பாதுகாப்பு உத்தரவாத கோரிக்கைகள் காரணமாக கிவ் சமாதானப் பேச்சுக்களை தடம் புரண்டதாக புடின் கூறினார்.

மேலும் படிக்க | தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

1999 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் தன்னிகரற்ற தலைவராக உள்ள புடின், மாஸ்கோவில் இருந்து கிழக்கே 5,550 கிமீ தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

உக்ரைனில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அதன் இலக்குகளை அடையுமா என்று ரஷ்ய விண்வெளி நிறுவன பணியாளர்கள் கேட்டதற்கு, “நிச்சயமாக. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று புடின் கூறினார்.

ரஷ்யாவிற்கு போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று புடின் கூறினார். கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதோடு மாஸ்கோவின் எதிரிகளுக்கு ரஷ்யாவின் மீதான தாக்குதல் தளம் உருவாதை தடுக்க வேண்டும் என்பதால், இந்த போர் அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

1991 சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுகளில் இருந்து ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கும் நோக்கிலான மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தோல்வி அடைந்து விட்டன என அவர் குறிப்பிட்டார். 

ரஷ்யா போர்க்குற்றங்கள் செய்ததாக உக்ரேனிய மற்றும் மேற்கத்திய நாடுகளின் கூற்றுக்கள் போலியானவை என புடின் நிராகரித்தார். உக்ரேனிய தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேறியதில் இருந்து, உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள், வீடுகளை அழித்தது மற்றும் எரிக்கப்பட்ட கார்கள் என புகைப்படங்களை காட்டி வருகின்றனர் என்றார் அவை அனைத்தும் போலியானது என அவர் கூறினார்.

 சிரிய நகரமான ரக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் ஏற்பட்ட பேரழிவை பற்றி கொஞ்சம் சிந்திக்குமாறு மேற்கத்திய தலைவர்களிடம் கூறியதாக புடின் கூறினார்.

“அமெரிக்க விமானத்தால் இந்த சிரிய நகரம் எப்படி இடிபாடுகளாக மாறியது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? சடலங்கள் சிதைந்து பல மாதங்களாக இடிபாடுகளில் கிடந்தன” என்று புடின் கூறினார். அதைப் பற்றி “யாரும் கவலைப்படவில்லை, யாரும் கவனிக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.