எல்.இ.டி., விளக்குகள் எம்.எல்.ஏ., வழங்கல்| Dinamalar

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ராமலிங்கம் எல்.இ.டி. விளக்குகள் வழங்கினார்.பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகள் வீடுகள் கட்டியுள்ளனர். இந்த வீடுகளை பா.ஜ., எம்.எல்.ஏ., ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார்.தொடர்ந்து, பயனாளிகளுக்கு எல்.இ.டி. விளக்குகள் வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொகுதி பா.ஜ., தலைவர் நாகராஜன், ஓ.பி.சி. மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், தொகுதி பொது செயலாளர் கதிரவன், மாநில செயலாளர் லதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.