கோயில் கும்பாபிஷேக விழாவில் சாப்பாட்டு போட்டி.. 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்டவருக்கு முதல் பரிசு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணியை ஒருவர் சாப்பிட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பூலன் கோடு பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சாப்பாடு போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் பஙகேற்ற வினு என்பவர் 13 நிமிடத்தில் 2 கிலோ வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்டு முதல் பரிசான 2 ஆயிரம் ரூபாயை தட்டிச் சென்றார்.

முதல் பரிசை தட்டிச் சென்ற வினு, ஏற்கனவே புரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கேற்று 43 புரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றதாக பெருமையுடன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.