மத்திய பிரதேசத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலை வெடித்து 5 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பதர்வாஸ் நகரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுமி உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

இவர்கள், ஷிவ்புரி மற்றும் குணாவில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், ஆண், பெண், சிறுவன் என 3 பேர் மருத்துவமனைகளிலேயே சிகிச்சையின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுகுறித்து பதர்வாஸ் காவல் நிலைய பொறுப்பாளர் ராகேஷ் சர்மா கூறியதாவது:-

முகமது உசேன் அன்சாரிக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.  அன்சாரி ஏற்கனவே சுமேலா கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்துவதற்கான உரிமம் பெற்றிருந்தார். ஆனால், மாவட்டத் தலைமையகத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதர்வாஸில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக ஆலையை நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரிடையாக செல்ல அனுமதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.