ரஷ்யாவினை விட்டு வெளியேறும் இன்ஃபோசிஸ்.. ஏன் தெரியுமா?

உலகின் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன. இதில் ஆரக்கிள் மற்றும் சாப் எஸ்.இ உள்பட பல நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளை இடை நிறுத்தியுள்ளன.

இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் (Infosys Ltd) நிறுவனமும், ரஷ்யாவிலிருந்து தனது வணிகத்தினை வெளியேற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உக்ரைன் – ரஷ்யா மோதலின் காரணமாக ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகின்றது.

1991க்கு பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!!

டெக்  ஜாம்பவான்கள் தடை

டெக் ஜாம்பவான்கள் தடை

சமீபத்தில் ஐபிஎம் நிறுவனம் தனது வணிகத்தினை ரஷ்யாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதே போல மைக்ரோ சாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் தங்களது எதிர்ப்பினை காட்டும் விதமாக விற்பனையை நிறுத்தியுள்ளன. சோனி நிறுவனமும் தங்களது சாப்ட்வேர்மற்றும் ஹார்வேர் ஏற்றுமதியினை நிறுத்தியுள்ளது.

கூகுளின் தடை

கூகுளின் தடை

இதேபோல PlayStation Storeம் தனது செயல்பாட்டினை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் சேவையையும் இடை நிறுத்தியுள்ளது. மேலும் அதன் ப்யூச்சர் திட்டங்களையும் இடை நிறுத்தம் செய்துள்ளது.

இதேபோல கூகுள் நிறுவனமும் தனது தேடல் மற்றும் யூடியூப் தயாரிப்புகள் உட்பட பலவற்றியிலும் விளம்பரங்களை தடை செய்துள்ளது.

மைக்கேல் மிஷுஸ்டின் வேண்டுகோள்
 

மைக்கேல் மிஷுஸ்டின் வேண்டுகோள்

மேலும் ரஷ்யர்களின் யூடியூப் சேனல்களையும் இடை நிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ரஷ்யாவின் பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின், முன்னதாக அன்னிய நிறுவனங்கள் தங்களது வணிகத்தினை ரஷ்யாவில் தொடர அனுமதிகக் வேண்டும். ரஷ்யர்களின் வேலைகளை பராமரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

உக்ரைன் போருக்கு எதிராக தனது வணிகத்தினை விட்டு வெளியேறுவதாக இன்ஃபோசிஸ் தரப்பில் கூறப்பட்டாலும், சமீபத்தியில் ரிஷி சுனக்கிடம் இன்ஃபோசிஸ் மற்றும் அவரது மனைவியின் பங்கு குறித்து ஸ்கை நியூஸ்-ல் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.இதுவும் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷி சுனக்கிடம் கேள்வி

ரிஷி சுனக்கிடம் கேள்வி

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டீஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் உண்டு. ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய பணக்காரர்கள் மீது பிரிட்டீஸ் அரசு தடைகளை விதிக்க முயன்ற நிலையில், ரஷ்யாவுடன் உங்கள் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது. உங்கள் மனைவிக்கு இந்தியா நிறுவனமான இன்ஃபோசிஸில் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரஷ்யாவில் செயல்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு அலுவலகமும் உண்டு, அவர்கள் மாஸ்கோவின் உள்ள ஆல்பா வங்கியுடன் தொடர்பில் உள்ளனர். நீங்கள் பின்பற்றாத விஷயங்கள் குறித்து, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறீர்களா? என்ற கேள்வியும் சுனக்கிடம் கேட்கப்பட்டது.

நான் ஒரு பிரிட்டீஸ் அரசியல்வாதி

நான் ஒரு பிரிட்டீஸ் அரசியல்வாதி

அதற்கு பதிலளித்த சுனக், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரிட்டீஸ் அரசியல்வாதி, எனவே, எனக்கு எந்த பொறுப்பு உள்ளதோ? அது குறித்தே நான் பேச வந்துள்ளேன். என் மனைவி இங்கு பேச வரவில்லை என்று கூறியிருந்தார். இவ்வாறு பேசப்பட்ட நிலையில் சில வாரங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது சற்று சந்தேகத்தினையும் கிளப்பியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ukraine – russia crisis! infosys to move business out of russia

ukraine – russia crisis! infosys to move business out of russia/ரஷ்யாவினை விட்டு வெளியேறும் இன்ஃபோசிஸ்.. ஏன் தெரியுமா?

Story first published: Wednesday, April 13, 2022, 20:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.