ரஷ்யாவைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை: அதிபர் விளாடிமிர் புதின் விளக்கம்

மாஸ்கோ: ரஷ்யாவை பாதுகாக்க உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் நடவடிக்கை சரியானதே என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்துக்கு நேற்று ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் சென்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஷ்யாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது.இன்றைய சூழலில், யாரையும்எந்த ஒருநாடும் தனிமைப்படுத் துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று. குறிப்பாகரஷ்யா போன்ற மிகப்பெரிய நாட்டை யாராலும் தனிமைப்படுத்தமுடியாது. எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம்

ரஷ்யாவை பாதுகாக்க உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அதன் நோக்கங்களை நிச்சயம் அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உக்ரைனின் ரஷ்ய எதிர்ப்புப் படைகளுடனான மோதல் தவிர்க்க முடியாதது.

விண்வெளித்துறையில் முதலிடம்

உக்ரைனில் போர் 49-வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தைரியமாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருகின்றன. அங்கு அதி நவீன ஆயுதங்களை ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது. ரஷ்யா இன்னும் விண்வெளித்துறையில் முதலிடத்தில் இருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ செயல்பாடு சரியானதே. அங்குள்ள டான்பாஸ் பகுதியில் இனப்படுகொலையை எங்களால் இனி பொறுத்துக்கொள்ள முடியாது

ஒருபுறம், நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம். மேலும் அவர்களை நாங்கள் காப்பாற்றுகிறோம். அதேநேரத்தில் மற்றொரு புறத்தில் நாங்கள் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அது சரியான முடிவுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.