5 மணிநேரம் வரை எரியும் Inverter LED பல்புகள் – விலையும் மலிவு தான்!

வெயில் காலங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படலாம். அதுபோல, வீட்டில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் இல்லாவிட்டால், அதிக சிரமம் ஏற்பட்டு, வெளிச்சம் வரும் வரை இருளில் இருக்க வேண்டியிருக்கும். இந்த சூழலில் உங்கள் கஷ்டத்தை போக்க, தற்போது சந்தையில் சில ரீச்சார்ஜபிள் எல் இ டி பல்புகள் கிடைக்கிறது.

மின்சாரம் இல்லாவிட்டாலும் வீட்டை விளக்கும். இதுபோன்ற பல அவசரகால LED இன்வெர்ட்டர் பல்புகள் சந்தையில் கிடைக்கின்றன. மின்சாரம் இல்லாதபோது இது பயனுள்ளதாக இருக்கும். இந்த பல்புகள் மின்சார பயன்பாட்டையும் குறைக்கின்றன. நாம் இதை ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்த முடியும். இந்த LED ரிச்சார்ஜபிள் எமர்ஜென்சி LED பல்புகள் குறித்து விரிவாகக் காணலாம்.

Gesto 9W Inverter Rechargeable battery Operated Emergency Led Bulb:

Gesto 9W எமர்ஜென்சி LED பல்பின் விலை ரூ.1,999. ஆனால், அமேசானில் இருந்து இதை ரூ.290க்கு வாங்கலாம். இதில் 2200mAh பேட்டரி உள்ளது. இந்த பல்ப் 3 முதல் 5 மணி நேரம் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இதன் சார்ஜிங் நேரம் 4 முதல் 6 மணி நேரம் ஆகும்.

10,000mAh பேட்டரி போன் தெரியுமா – இப்படியும் ஸ்மார்ட்போன் இருக்கா!

Halonix Prime 9W B22 6500K Cool Day Light Inverter Rechargeable Emergency Led Bulb:

ஹலோனிக்ஸ் பிரைம் 9 வாட் எமர்ஜென்சி LED பல்பின் விலை ரூ.499 ஆகும். அமேசானில் இருந்து இதை ரூ.399க்கு வாங்கலாம். இது ஒரு ரிச்சார்ஜபிள் இன்வெர்ட்டர் LED பல்பு. எமர்ஜென்சி லைட்டாகவும் பயன்படுத்தலாம். இந்தச் பல்ப் 4 மணிநேரம் வரை பிரகாசமாக எரியும். முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும். இது 6 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.

DesiDiya 9 Watt B22 Base 6500k இன்வெர்ட்டர் ரிச்சார்ஜபிள் எமர்ஜென்சி LED பல்ப்:

தேசிதியா 9 வாட் எமர்ஜென்சி எல்இடி பல்பின் விலை அமேசானில் ரூ.329 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 2200mAh திறன்கொண்ட பேட்டரி உள்ளது. இது 4 மணிநேரம் வரை வெளிச்சத்தை தரும் திறன் கொண்டது. இந்த பல்பானது 8 முதல் 10 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

குண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!

Philips 10W B22 LED அவசர இன்வெர்ட்டர் பல்ப்:

பெரும்பாலான வீடுகளில் 10 வாட் பல்ப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது பொருத்தமான அறைகளில் அதிக வெளிச்சம் தருகிறது. இந்த பல்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இயக்கப்படும்போது தானாகவே சார்ஜ் ஆகும். விளக்கை முழுமையாக சார்ஜ் செய்யும் போது 4 மணிநேர வரை பிரகாசமான வெளிச்சத்தை தரும். பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.499க்கு இந்த பல்பை வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.